47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் எங்கு நடைபெறும்: மத்திய நிதியமைச்சகம் தகவல்!
By : Thangavelu
47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை எந்த இடத்தில் நடத்துவது, எப்போது நடத்துவது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் குழுவின் தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் வெளிநாடு சென்றிருந்ததால், கடந்த மாதம் நடைபெற இருந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரிமுறையில் பல சீர்த்திருத்தங்கள், வரிப்படிநிலையில் மாற்றங்கள், புதிய வரிவிதிப்புகள் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டது. இக்கூட்டம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் பற்றி மத்திய நிதியமைச்சகம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜூன் 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது ஸ்ரீநகரில் இரண்டாவது முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. 14வது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Asianetnews