Kathir News
Begin typing your search above and press return to search.

1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூலான ஜிஎஸ்டி வருவாய் - தொடர்ந்து முன்னேற்ற பாதையில் இந்திய பொருளாதாரம்!

1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூலான ஜிஎஸ்டி வருவாய் - தொடர்ந்து முன்னேற்ற பாதையில் இந்திய பொருளாதாரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Oct 2022 11:38 AM GMT

செப்டம்பர் 2022ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹ 1,47,686 கோடி. இதில் சிஜிஎஸ்டி ₹ 25,271 கோடி , எஸ்ஜிஎஸ்டி ₹ 31,813 கோடி. ஐஜிஎஸ்டி ₹ 80,464 கோடி வசூலானது.

2022 செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 26% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 39% அதிகமாக இருந்தது மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனையின் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவான வருவாயை விட 22% அதிகமாகும் .

தொடர்ந்து ஏழாவது மாதமாக மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ₹ 1.4 லட்சம் கோடியை விட அதிகமாக வசூலாகி உள்ளது. செப்டம்பர் 2022 வரையிலான ஜிஎஸ்டி வருவாயின் வளர்ச்சி கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 27% ஆக உள்ளது. ஆகஸ்ட் 2022ல், 7.7 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டன, இது ஜூலை 2022 இல் 7.5 கோடியை விட சற்று அதிகமாக இருந்தது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News