இதுவரையில் இல்லாத உச்சம்: ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1.68 லட்சம் கோடிக்கு ஜி.எஸ்.டி. வரி வசூல்!
By : Thangavelu
இந்தியா முழுவதும் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. அப்போது முதல், மிகவும் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.68 லட்சம் கோடிக்கான ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது தற்போதைய வரி வசூல் 20 சதவீதம் அதிகமாகும்.
இந்த வரியானது வரி, ஏய்பாளர்களுக்கு எதிராக அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்வது மூலமாக இது போன் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்னர் அதிகபட்சமாக மார்ச் மாதத்தில் 1.40 லட்சம் கோடி அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்பட்டிருந்தது. அதனை ஒப்பிட்டால் தற்போது வசல் செய்யப்பட்டது ரூ.25,000 கோடி அதிகமாக இருக்கிறது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu