Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் 5.84 லட்சம் மண் விளக்குகளுடன் தீபாவளி - கின்னஸ் சாதனை?

அயோத்தியில் 5.84 லட்சம் மண் விளக்குகளுடன் தீபாவளி - கின்னஸ் சாதனை?

அயோத்தியில் 5.84 லட்சம் மண் விளக்குகளுடன் தீபாவளி - கின்னஸ் சாதனை?

Saffron MomBy : Saffron Mom

  |  14 Nov 2020 7:01 PM GMT

இந்த வருடம் தீபாவளி மிகவும் சிறப்பானது. இந்துக்களின் 500 வருட போராட்டத்திற்கு பிறகு ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான ராமர் கோவில் அமையவிருக்கிறது. ராமபிரான் இந்த வருடம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அயோத்திக்கு திரும்புகிறார்.

இதை முன்னிட்டு அயோத்தி நகரம் முழுவதும் மண் ஒளிவிளக்குகள் மிளிர வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் யோகி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நவம்பர் 13 அன்று அயோத்தியின் ஆற்றங்கரையில் 5.84 லட்சம் விளக்குகளை ஒளிரச் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்ட வகையில் இந்த கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த தீபாத்சோவ் கொண்டாட்டங்கள் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் ஆதித்தியநாத் முன்னிலையில் தொடங்கியது. "நம் தலைமுறை ராமர் கோவில் கட்டுமானத்தை காணும் வாய்ப்பை மட்டுமல்ல, அதன் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டத்தையும் பெற்றிருக்கிறோம். 500 ஆண்டு கால போராட்டத்தில் இக்கோவிலை காணும் கனவுடன் பலரும் காலமானார்கள். இந்த ராம ராஜ்யத்தின் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி" என்று தீபாத்சவ் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் மேலும் கூறுகையில், அடைத்து கொரானா வைரஸ் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி தீபாத்சவ் கொண்டாடியதாகவும், ராமர் கோவில் கட்டுமானத்தின் போதும் அதை பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு முன்பு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, பூமி பூஜை நிகழ்ச்சி இருந்தார். அன்று, ராமஜென்ம பூமியில் மாலையில் பதினோராயிரம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டன. மறுபடியும் கொண்டாட்டங்கள் நவம்பர் 11, 2020 அன்று தொடங்கி, ராமபிரானுக்கு பல சிலைகள் அமைக்கப்பட்டன.

இந்த மாதிரியான கொண்டாட்டங்கள் மார்ச் 2017 யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகு ஆரம்பிக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News