Kathir News
Begin typing your search above and press return to search.

கலவரம்! குஜராத்தில் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டும் பேரணி மீது மறுபடி தாக்குதல்!

கலவரம்! குஜராத்தில் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டும் பேரணி மீது மறுபடி தாக்குதல்!

கலவரம்! குஜராத்தில் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டும் பேரணி மீது மறுபடி தாக்குதல்!

Saffron MomBy : Saffron Mom

  |  19 Jan 2021 7:30 AM GMT

தற்போது அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமர் கோவிலுக்காக பல்வேறு இந்து அமைப்புகள் மக்களிடம் நன்கொடை பெறுவதற்காகப் பேரணிகள் நடத்திவருகின்றனர். இதனைக் குலைக்கும் நோக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கும்பல் அந்தந்த பகுதியில் வைத்து பேரணி நடத்துபவர்கள் மேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
அதே போன்று டிசம்பர் 17 இல் கட்ச் மாவட்டத்தில் காந்த்திடம் பகுதியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்காகப் பேரணி நடத்தியவர்கள் மீது குறிப்பிட்ட சமூகத்தினர் தாக்குதல் நடத்தியதால் வன்முறை கிளம்பியது. அதனைத் தொடர்ந்து வன்முறையைத் தடுக்க காவல்துறை லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
பேரணியின் போது கற்களை வீசியதால் வன்முறை கிளம்பியது என்று கட்ச் SP மயூர் படேல் தெரிவித்தார். சம்பவம் இரவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். "பேரணியின் போது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது அதனால் வன்முறை கிளம்பியது.
அதனால் ரிக்ஸ்சா முதலியவை எரிக்கப்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினோம்," என்று IGP JR மோதலியா தெரிவித்தார். இதே போன்று ஒரு சம்பவம் சடாயு கிராமத்தில் நடந்துள்ளது. வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றாலும் சட்டவிரோத சம்பவத்துக்காக காவல்துறை FIR பதிவு செய்துள்ளது.
இதுபோன்று குஜராத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிக்குப் பேரணி நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடைபெறுவது முதல் முறை அன்று. ஜனவரி 16 இல் மும்பை காவல்துறை ராமர் கோவில் சுவரொட்டியைக் கிழித்தது. அதனை வீடியோ எடுக்க முயன்ற VHP தலைவர்களைக் கைது செய்தது.
இதேபோன்று தாக்குதல் மத்தியப் பிரதேசத்தில் இரண்டு நடந்துள்ளது. டிசம்பர் 26 இல் பேரணி நடத்தியவர்கள் மீது முஸ்லீம் கும்பல் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது. டிசம்பர் 29 இல் இந்தோர் பகுதியிலும் பேரணி நடத்தியவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News