Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் நடவடிக்கை திருப்தி - எதிர்கட்சிகளின் சதியை முறியடித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவின் நடவடிக்கை திருப்தி - எதிர்கட்சிகளின் சதியை முறியடித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2022 12:14 PM GMT

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

அதேபோல் நவீன் ஜிந்தால் தனது டுவிட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தனித் தனியே இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுபுர் சர்மாவுக்கு அனுப்பியுள்ள நோடீஸ்சில், உங்களின் கருத்து கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக உங்கள் மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நீங்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள் என கூறப்பட்டுள்ளது.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அந்த கட்சியின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில், எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது.

எங்கள் கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் எதிரானது. பாஜக அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை.

பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது" ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் நுபுர் சர்மாவை வைத்து அரசியல் செய்ய நினைத்த எதிர்கட்சிகளின் சதியை முறியடித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்துள்ள விளக்கத்தை ஈரான் ஏற்றுக்கொண்டது.

OIC அமைப்பின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான ஈரான், இந்தியாவின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாகவும், விரைவில் ஈரான் அதிபர் இந்தியா வருவதாகவும் கூறியுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News