மிக முக்கிய ஆவணங்களை கையாளும் சர்வர்கள் ஹேக்.? இண்டிகோ நிறுவனம் அதிர்ச்சி தகவல்.!
மிக முக்கிய ஆவணங்களை கையாளும் சர்வர்கள் ஹேக்.? இண்டிகோ நிறுவனம் அதிர்ச்சி தகவல்.!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் தங்களது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோ திகழ்ந்து வருகிறது. தங்கள் நிறுவனத்தின் சர்வர்கள் டிசம்பர் மாத தொடக்கத்தில் ஹேக் செய்யப்பட்டதாகவும் ஆனால் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் அதனை மீட்டு விட்டதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இதில் சில முக்கிய ஆவணங்களும் இருந்ததாகவும், பொதுவெளியில் சொல்ல முடியாத ஆவணங்களை ஹேக்கிங் செய்தவர்கள் பொது வெளியில் வைத்து விடக்கூடிய ஆபத்து இருந்தபோதிலும், தங்களின் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த சர்வரை உடனடியாக மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இண்டிகோ நிறுவனத்தின் விமான போக்குவரத்து நிறுவனம் இயங்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.