Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்லாமியர்களின் ஹஜ் பயணம்.. மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு.!

இஸ்லாமியர்களின் ஹஜ் பயணம்.. மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு.!

இஸ்லாமியர்களின் ஹஜ் பயணம்.. மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2020 4:12 PM GMT

மும்பை ஹஜ் இல்லத்தில் இந்திய ஹஜ் குழுவின் கூட்டம் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கூறியதாவது: டிசம்பர் 10ம் தேதி 2021 ஹஜ் பயண விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாக இருந்தது.

ஆனால் தற்போது இது 2021ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண் பயணிகள் உடன் வராத பெண்களுக்கான பிரிவில் (மேஹ்ரம் இல்லாத) 500 விண்ணப்பங்கள் உட்பட, மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை ஹஜ் 2021க்காக பெறப்பட்டுள்ளது.

இந்த பிரிவில், 2020ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்த விண்ணப்பங்கள் 2021க்கும் செல்லும். மேலும், லாட்டரி முறையிலிருந்து இப்பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படும். இணையம், இணையமில்லா முறை, ஹஜ் கைபேசி செயலி மூலம் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News