Kathir News
Begin typing your search above and press return to search.

உள்நாட்டில் தயாரான ராணுவ கருவிகள் ஒப்படைக்கும் விழா.. பாதுகாப்புத்துறை அமைச்சர் பங்கேற்பு.!

உள்நாட்டில் தயாரான ராணுவ கருவிகள் ஒப்படைக்கும் விழா.. பாதுகாப்புத்துறை அமைச்சர் பங்கேற்பு.!

உள்நாட்டில் தயாரான ராணுவ கருவிகள் ஒப்படைக்கும் விழா.. பாதுகாப்புத்துறை அமைச்சர் பங்கேற்பு.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  19 Dec 2020 7:45 PM IST

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 முக்கிய ராணுவ தளவாடங்கள் படைகளிடம் ஒப்படைப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்படைத்தார்.

ராணுவத்துக்கான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதலில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து, இந்தியா தான் அதிக அளவில் செலவிடுகிறது. நாட்டின் ராணுவத் தேவைகளில், 60 - 65 சதவீதம், இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 101 வகையான ஆயுதம் மற்றும் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்சென்ற ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். அப்போது வர கூறுகையில் அனைத்து துறைகளிலும் சுயசார்பு நிலையை அடைய வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

அதனால் ராணுவ ஆயுதத் தயாரிப்பிலும் சுயசார்பை அடையும் வகையில், 101 வகையான ஆயுதங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆயுதங்கள் இறக்குமதிக்கான தடை, 2025க்குள் முழுவதுமாக அமலுக்கு வரும். ஆயுதங்களின் தன்மையை பொறுத்து, அதை நம் நாட்டில் தயாரிப்பதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், இந்த தடை, குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்தப்படும் என்றார்.

இதையடுத்து இந்திய ராணுவத்துக்கு தேவையான ஏராளமான பொருள்கள் மற்றும் தளவாடங்களை கூடுமானவரை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பெரும்பாலான பணிகள் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 தளவாடங்களை முப்படைகளிடம் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஒப்படைத்தார். டெல்லியில் உள்ள டி.ஆர்.டி.ஓ. பவனில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கடல்சார் சூழ்நிலையை எச்சரிக்கும் சாதனத்தை கடற்படை தளபதி கரம்பீர் சிங்கிடம் ஒப்படைத்தார். அதேபோல அஸ்ட்ரா எம்கே-1 ஏவுகணையை விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியாவிடம் ஒப்படைத்தார். எல்லை கண்காணிப்பு சாதனத்தை ராணுவ தளபதி எம்.எம்.நரவனேவிடம் ஒப்படைத்தார்.

மேலும், சிறப்பாக செயல்பட்ட டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத்சிங் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News