வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுவோம் - மக்களுக்கு உதாரணமாக பா.ஜ.க தலைவர்கள்!
மத்திய அரசின் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுவோம், மக்களுக்கு உதாரணமாக பா.ஜ.க தலைவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏற்றினார்கள்
By : Bharathi Latha
மத்திய அரசின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியதற்கு இணங்க ஆகஸ்ட் 13 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்தியத் திருநாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தில் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி தன்னுடைய தேசப்பற்று உணர்வை வெளிப்படுத்தும் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் இதை அரசியல் உணர்வுடன் பார்த்து வந்தார்கள். அதற்கு பா.ஜ.க சார்பில் தேசப்பற்று வேறு, அரசியல்,வேறு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்க்காதீர்கள் என்று அறிவுறுத்தியிருந்தது.
எனவே பிரதமர் மோடி அறிவுறுத்தி என் பெயரில் இன்று காலை முதல் பல்வேறு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தங்களுடைய வீடுகளில் நம்முடைய பாரத நாட்டின் தேசிய கொடியை ஏற்றி மகிழ்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது மனைவி சோனல் ஷா வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றினர். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு ஊக்குவிக்கும் இன்று தொடங்குகிறது.
பெங்களூரில் உள்ள எங்கள் இல்லத்தில் குடும்பத்துடன் மூவர்ணக் கொடியை ஏற்றிய நிர்மலா சீதாராமன். குடும்பத்துடன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய தருணம் பெருமையானது என்று குறிப்பிட்டிருந்தார். தமிழக பா.ஜ.க மகளிரணி தலைவி திருமதி.வானதி சீனிவாசன் அவர்களும் தங்களுடைய இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி அவற்றுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டள்ளார். எனவே மக்களுக்கு உதாரணமாக பா.ஜ.க தலைவர்களும் தற்போது தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
Input & Image courtesy: News