Begin typing your search above and press return to search.
முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு.!
குடும்பத்தை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.

By : Thangavelu
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இந்த சூழலில் முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களின் பணி அதிகரித்துள்ளது. அவர்களின் குடும்பத்தை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில், நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு அதிகாரம் பெற்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மேலும், 6 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Next Story
