Kathir News
Begin typing your search above and press return to search.

பால் வியாபாரி வாங்கிய ஹெலிகாப்டர்.. மகாராஷ்டிராவை வியக்க வைத்த பால் வியாபாரி.!

பால் வியாபாரி வாங்கிய ஹெலிகாப்டர்.. மகாராஷ்டிராவை வியக்க வைத்த பால் வியாபாரி.!

பால் வியாபாரி வாங்கிய ஹெலிகாப்டர்.. மகாராஷ்டிராவை வியக்க வைத்த பால் வியாபாரி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Feb 2021 9:20 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி நகரத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தன் போயிர். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வணிக பயன்பாட்டுக்காக ஒரு ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.விவசாயிகள் என்றாலே ஏழ்மை நிலையில் இருப்பார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனம் வாங்குவதற்குகூட சிரமப்படுவார்கள்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், பிவாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயியும் பால் வியாபாரியுமான ஜனார்த்தன் போரி ரூ.30 கோடி ரூபாயில் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் விவசாயம் மட்டுமின்றி கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார். இவர் பல்வேறு மாநிலங்களில் தொழில் செய்து வருவதால் எளிதில் சென்று வருவதற்கு ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார்.

இவர் பால் வியாபாரி என்றாலும் ஒரு விவசாயி ஆகத்தான் தன்னுடைய ஆரம்பகட்ட பணியை செய்து வந்துள்ளார். இதன் மூலமாக கிடைத்த பணத்தில் படிப்படியாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News