குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண்சிங சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இத்தகவலை விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். அதில் பயணம் செய்த கேப்டன் வருண்சிங் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குன்னூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
IAF is deeply saddened to inform the passing away of braveheart Group Captain Varun Singh, who succumbed this morning to the injuries sustained in the helicopter accident on 08 Dec 21. IAF offers sincere condolences and stands firmly with the bereaved family.
— Indian Air Force (@IAF_MCC) December 15, 2021
இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கமாண்டோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண்சிங சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இத்தகவலை விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Twiter