Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை விரையும் சீன உளவு கப்பல் - தென் மாநிலங்களுக்கு உளவுத்துறை விடுக்கும் எச்சரிக்கை என்ன?

இலங்கை விரையும் சீன உளவு கப்பல் - தென் மாநிலங்களுக்கு உளவுத்துறை விடுக்கும் எச்சரிக்கை என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2022 11:08 AM GMT

சீன ராணுவத்தின் உளவு கப்பல், இலங்கை துறைமுகம் செல்கிறது. ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை அங்கு முகாமிடும் இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சீன கப்பலின் இந்தப் பயணம் இந்திய உளவு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் அலசப்படுகிறது.

சீன கப்பலில் இருந்து, 750 கி.மீ., பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும்.

அதுபோல, கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. தென் மாநிலங்களில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News