Begin typing your search above and press return to search.
10 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டின் சிறப்பம்சங்கள்.!

By : Rama Subbaiah
இ.ஓ.எஸ் -01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நவம்பர் 6 ந்தேதி மாலை 3.12க்கு இது ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. கொரோனா பாதிப்புக்கிடையே இந்தாண்டின் முதல் ராக்கெட்டாக இஸ்ரோ ஏவியுள்ளது. அனைத்து சூழலிலும் படங்கள் எடுக்கும் சின்தடிக் அபர்ச்சர் ரேடார் தொழில்நுட்பம் இ.ஓ.எஸ்-01ல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் உள்ளடங்கியுள்ளன.
பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட், இந்தியாவின் 51வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. 26 மணி நேர கவுண்ட்டவுனை முடித்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது.
பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பல்வேறு தடைகளை கடந்து சாதனை படைத்துள்ள விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். செயற்கைகோள்கள், வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து, ராக்கெட்டை விண்ணில் ஏவ உதவியதற்காக விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என்றும், கொரோனா காலத்தில், குறைந்த நபர்களின் உதவியுடன் பிஎஸ்எல்விசி-49 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது என்றும் இஸ்ரோ தலைவர் திரு.சிவன் பெருமிதம் தெரிவித்தார்.

Next Story