கட்டாய மத மாற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மசோதா நிறைவேற்றம் .
ஹிமாசலப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு எதிராக 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
By : Bharathi Latha
தற்போது இமாச்சல பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் குற்றத்திற்காக அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா பெற்றுள்ளது. ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் ஒரு குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக சட்டத்திருத்தம் சனிக்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் அவர்களுடைய சுய விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக அவர்களை கட்டாய மதமாற்றம் செய்து அல்லது வாக்குறுதியின் பேரில் மதமாற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
எனவே கட்டாய மதமாற்றத்தை செய்யும் நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கும் மசோதா தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இமாச்சலில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேச சுதந்திர சட்டத்திருத்தம் என்பதன் பேரில் தற்போது இது கொண்டு வரப் பட்டுள்ளது. இமாச்சல முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இந்து மசோதாவை வெள்ளிக்கிழமை அன்று தாக்கல் செய்தது கடந்த 18 மாதங்களுக்கு பிறகு இமாச்சல் பிரதேசம் மத சுதந்திர சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மேற்பட்டவர்களை கட்டாய மத மாற்றம் செய்யப்படுவது சட்டப்படி குற்றமாகும். இதற்கான தண்டனை முறைகள் 2019 படி இடம்பெறவில்லை தற்போது அவற்றில் திருத்தம் செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்பது கொண்டு வரப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது என்று கூறினார். ஏற்கனவே இருந்து திருத்த மசோதாக்கள் பிரிவு 2,4, 7 மற்றும் 13 ஆகிய பிரிவுகளின்படி திருத்தம் செய்யப்பட்டு இப்போது புதிய சட்டம் திருத்தப்பட்டு உள்ளது.
Input & Image courtesy: Dinamalar News