Kathir News
Begin typing your search above and press return to search.

"புதிய விவசாய சட்டத்தினால் அதிக இலாபம் பெறுகிறோம்" - ஹிமாச்சல பிரதேச விவசாயிகள் மகிழ்ச்சி.!

"புதிய விவசாய சட்டத்தினால் அதிக இலாபம் பெறுகிறோம்" - ஹிமாச்சல பிரதேச விவசாயிகள் மகிழ்ச்சி.!

புதிய விவசாய சட்டத்தினால் அதிக இலாபம் பெறுகிறோம் - ஹிமாச்சல பிரதேச விவசாயிகள் மகிழ்ச்சி.!

Saffron MomBy : Saffron Mom

  |  2 Dec 2020 8:44 AM GMT

புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த ஆப்பிள் உற்பத்தியாளர்கள் புதிய சட்டத்தினால் ஏற்பட்ட மாற்றங்களினால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் தங்களுக்கு லாபம் எளிதில் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் இதற்கு முன்னர் அவர்கள் பொருட்களை விற்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்பொழுது பணம் நேரடியாகவே தங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

ANI.செய்திகளுக்குப் பேட்டி அளித்த ஒரு விவசாயி, "முன்பெல்லாம் ஆப்பிள்களை நாங்கள் விற்பதற்கு டெல்லிக்கு செல்ல வேண்டி இருந்தது. தற்பொழுது மையங்களில் நாங்களே நேரடியாக விற்கிறோம்" என்று தெரிவித்தார். மேலும், அம்மாவட்டத்தில் உள்ள தனியார் கொள்முதல் மையங்கள் தாங்கள் அதிகம் சம்பாதிக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

"போன வருடம் 12,000 கிரேட் ஆப்பிள்களையும் இந்த வருடத்தில் 10,000 கிரேட் ஆப்பிள்களையும் விற்றுள்ளேன். கட்டணம் நேரடியாக எங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் தரநிர்ணய அதிகாரிகள், தொழிலாளர்கள்,கமிஷன் போன்றவற்றில் பணம் செலுத்துவதற்கு நாங்கள் நிறைய செலவு செய்தோம். இப்பொழுது நாங்கள் நிறைய சேமிக்கிறோம். நன்றாக பணம் சம்பாதிக்கிறோம்." என்று இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த விவசாயிகள் ANI செய்திகளின்படி தெரிவித்தனர்.

காங்கிரஸ் மற்றும் அகாலிதளத்தினால் தவறாக வழி நடத்தப்பட்டு, காலிஸ்தான் காரணிகளால் பின்னால் இருந்து தூண்டப்படும் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சட்டங்களால் ஏற்படும் பலன்களை பார்க்காமல், மூன்று சட்டங்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சட்டங்கள் காரணமாக விவசாயிகளின் நலத்துக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் எதிர்ப்பை நியாயப்படுத்தலாம். ஆனால் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஒரு போராட்டம் செய்வது என்ன மாதிரியான நியாயம் என்று தெரியவில்லை.

இதற்கு மற்றொரு உதாரணமாக காய்கறிகளை விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் பீகாரைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி இதற்கு மற்றொரு உதாரணம். இந்தியாவின் ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த குமார் பிறகு காய்கறிகளை விற்க முடிவு செய்தார். ஒரு மதிப்புமிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகும், விவசாயத்தை திறமையற்ற மற்றும் தாழ்ந்த தொழிலாகக் கருதப்படும் நேரத்திலும் அவர் இத்தொழிலை செய்ய முடிவு செய்தார்.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே 2006-இல் APMC சட்டத்தை ரத்து செய்துள்ளது. எனவே தயாரிப்புகளை நேரடியாக அவர்களால் விற்க முடியும்.

குமார் பல விவசாயிகளை ஒன்றிணைத்து சந்தைகளுக்கு நேரடியாக அவர்களை அவர்களின் பொருட்களை விற்க உதவி செய்தார். 16 மாவட்டங்களில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அவரது அடித்தளத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

மோடி அரசாங்கம் இந்த மூன்று விவசாய சட்டங்களை அதிகாரிகள் மற்றும் புரோக்கர்களிடம் இருந்து விவசாயிகளையும், விவசாயத் துறையும் பிரித்து விவசாயிகளை நேரடியாக சந்தைகளுடன் இணைப்பதற்காக கொண்டுவந்தனர். இந்த 3 மசோதாக்கள் விவசாயிகள் நேரடியாக சந்தையில் விற்பனை செய்வதற்கும், பல்வேறு விவசாய பொருட்களை உள்ளடக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை ஒழுங்கு படுத்துவதற்கான அரசாங்கத்தின் அதிகாரத்தை குறைக்கும், ஒப்பந்த விவசாயத்தை முறைப்படுத்தும்.

இந்த சட்டம் இடைத்தரகர்களை குறைத்து விவசாயிகளின். வருமானத்தை மேம்படுத்தும் ஆனால் இதே சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தங்களுடைய சுயநலத்திற்காக தற்பொழுது இதே மசோதாக்களை எதிர்த்தும் நிராகரித்து விவசாயிகளை தூண்டிவிடுகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News