Kathir News
Begin typing your search above and press return to search.

இமாச்சல பிரதேசங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவும்.. பிரதமர் மோடி உறுதி.!

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் இமாச்சல பிரதேசம் ஆகும். இந்த மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நிற்காமல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இமாச்சல பிரதேசங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவும்.. பிரதமர் மோடி உறுதி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 July 2021 7:03 AM IST

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் இமாச்சல பிரதேசம் ஆகும். இந்த மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நிற்காமல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

அதிகமாக தர்மசாலாவில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் கட்டடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில கட்டடங்களை வெள்ளம் அடித்துச்சென்றுள்ளது. அதே போன்று தர்மசாலா அருகே உள்ள மாஞ்சிகாட் பகுதியில் 2 கட்டடங்களை வெள்ளநீர் அடித்துச்சென்றுள்ளது. அரசு பள்ளிக்கட்டடம் உட்பட பல வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது.

மேலும், மண்டிபதன்கோட் சாலையில் பாலம் ஒன்று அடித்துச்செல்லப்பட்டதால், போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளும் வெள்ளப்பெருக்கில் அடித்துசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அம்மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News