யாஸ் புயல்: மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.!
யாஸ் புயலால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு, அம்மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.

By : Thangavelu
யாஸ் புயலால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு, அம்மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.
யாஸ் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தேசிய மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டங்களில் உள்ள கொரோனா மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய மத்திய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே யாஸ் புயல் முன்னெச்சரிக்கை குறித்து, ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட முதலமைச்சர்களுடன், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது புயலின்போது கொரோனா மருத்துவமனைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். மேலும் மருந்து பொருட்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும், மழையின்போது மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை மருத்துவமனைகளில் செய்திருக்க வேண்டும் என முதலமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பியதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
