Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவமனையில் தீ விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!

மருத்துவமனையில் தீ விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!

மருத்துவமனையில் தீ விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2020 7:43 PM IST

குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு இந்த மருத்துவமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ராஜ்கோட்டில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் பற்றி செய்தியறிந்து மிகவும் துயரடைந்தேன். இந்த துரதிருஷ்டவச சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயர நினைவுகளில் நானும் பங்கு கொள்கிறேன்.

இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டி கொள்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு நிர்வாகம் உறுதிப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News