Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார்: மக்களவையில் மசோதா தாக்கல்!

ஒருவரின் வாக்காளர் பட்டியல் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவலம் பல்வேறு இடங்களில் இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் ஒருவர் இரண்டு அல்லது மூன்று ஓட்டுகள் கூட போடுகின்றனர். இது போன்றவற்றை தடுப்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு வகையிலான சீர்த்திருங்களை கொண்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார்: மக்களவையில் மசோதா தாக்கல்!

ThangaveluBy : Thangavelu

  |  20 Dec 2021 8:30 AM GMT

ஒருவரின் வாக்காளர் பட்டியல் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவலம் பல்வேறு இடங்களில் இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் ஒருவர் இரண்டு அல்லது மூன்று ஓட்டுகள் கூட போடுகின்றனர். இது போன்றவற்றை தடுப்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு வகையிலான சீர்த்திருங்களை கொண்டு வருகிறது.

அதன்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கின்ற முயற்சியை தற்போது பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியாது. இதனை எளிதில் அடையாளம் காணப்பட்டு நீக்க முடியும். இதனால் கள்ள ஓட்டுக்கள் போடுவது அறவே தடைப்படும்.

இந்நிலையில், தேர்தல் சட்டங்கள் மசோதா திருத்தம் வருவதால், அதிகாரிகள் வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்டு பெறுவார்கள். இந்த மசோதா தற்போது மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் உரையாற்றும்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News