Kathir News
Begin typing your search above and press return to search.

நெருங்கிய நண்பனாக இருந்த ஆஸ்திரேலியா சீனாவுக்கு எதிரியாக மாறியது எப்படி ? - நிலவும் பனிப்போரின் காரணங்கள்.!

நெருங்கிய நண்பனாக இருந்த ஆஸ்திரேலியா சீனாவுக்கு எதிரியாக மாறியது எப்படி ? - நிலவும் பனிப்போரின் காரணங்கள்.!

நெருங்கிய நண்பனாக இருந்த ஆஸ்திரேலியா சீனாவுக்கு எதிரியாக மாறியது எப்படி ? - நிலவும் பனிப்போரின் காரணங்கள்.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  9 Dec 2020 8:44 AM GMT

ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கு இடையே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பொருளாதார நல்லுறவுகள் நிலவின. ஆனால் இந்த ஆண்டில் பல விரிசல்கள் உண்டாக்கியுள்ளன. இதற்கு காரணம் ஆஸ்திரேலியா, உய்குர் இஸ்லாமியர்களை சீனா நடத்தும் விதம் மற்றும் ஹாங்காங் போராட்டங்கள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால் சீனா ஆஸ்திரேலியா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனாவின் ஆரம்பம் மற்றும் தோற்றம் குறித்த உலகளாவிய விசாரணை சீனாவின் மீது நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா முதன்முதலாக கூறியது சீனாவுக்கு மேலும் அதிருப்தியை உண்டாக்கியது.

இதற்கு காரணம் அரசியல் முதல் கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் வரை ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து ஏற்பட்ட அச்சத்தின் விளைவு தான் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக சீனா - இந்தியா இடையே எல்லை மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் இந்தியா அமெரிக்கா, பிரான்சுடன் இணைந்து நடத்திய மலபார் போரில் இதுவரை பங்கேற்காத ஆஸ்திரேலியா பங்கேற்றதும் சீனாவுக்கு கடும் கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ஆஸ்திரேலியா சிறந்த கடல் வலிமை பெற்ற நாடாகும்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் போரில் ஈடுபட்டபோது, அமெரிக்காவுக்கு உதவியாக அந்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் தங்கி இருக்கும் ஆஸ்திரேலிய ராணுவத்தினர் பல சந்தர்பங்களில் 39 பேரை கொடூரமாக கொன்றது போர்க்குற்றம் என ஆப்கான் ஆஸ்த்ரேலியா மீது குற்றம் சாட்டியது. பல நாடுகளும் இதை கண்டித்த நிலையில் ஆஸ்திரேலியா இது குறித்து விசாரணை கமிஷன் அமைத்து தம் படையினருக்கு தண்டனை அளித்தது.

ஆனால் ஆஸ்திரேலிய ராணுவம் நடத்திய விசாரணை சரியில்லை, சரியான தண்டனை அளிக்கப்படவில்லை என ஆப்கன் குற்றம் சட்டி இருந்தது. இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலிய ராணுவ சீருடையில் இருக்கும் ஒருவர் குழந்தையின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த கத்தியை வைத்து இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, "ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் மற்றும் கைதிகளை ஆஸ்திரேலியா படையினர் கொலை செய்ததில் அதிர்ச்சியடைந்தோம்.

இது போன்ற செயல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர்களை விளக்கம் கூற அழைப்பு விடுக்கின்றோம்" எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா, சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், இப்புகைப்பட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையானது.

இதனைத்தொடர்ந்து சீனாவின் இந்த செயலை கண்டித்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், "பழிவாங்கும் எண்ணத்துடன் போலியான, மூர்க்கத்தனமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்த போலி புகைப்படம் எங்கள் படைகள் மீது மோசமான கறையைப் படிய வைத்துள்ளது இந்த தவறான பதிவுக்காகச் சீனா வெட்கப்பட வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தில் சீனா ஆஸ்திரேலியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறினார். இந்த விவகாரத்தில்ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாக ஸ்வீடன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் சீனாவை கண்டித்துள்ளன.

இந்நிலையில் சீனா ஆஸ்திரேலியாவில் இருந்து செய்யும் இறக்குமதிகள் மீது கடுமையான தடைகள் விதித்துள்ளது. பதிலுக்கு ஆஸ்திரேலியாவும் சீனாவில் இருந்து செய்யும் இறக்குமதி பொருள்கள் மீது தடை விதித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு முன் நல்ல நெருக்கமான நண்பர்களாக இருந்த இரு நாடுகளும் கொரோனாவுக்கு பிறகு இன்று பனிப்போர் நடக்கும் அளவுக்கு ஆகிவிட்டது என உலக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News