Kathir News
Begin typing your search above and press return to search.

வரதட்சணையாக எருமை வழங்காததால் முத்தலாக் வழங்கிய கணவன்!

வரதட்சணையாக எருமை வழங்காததால் முத்தலாக் வழங்கிய கணவன்!

வரதட்சணையாக எருமை வழங்காததால் முத்தலாக் வழங்கிய கணவன்!

Saffron MomBy : Saffron Mom

  |  26 Jan 2021 2:27 PM GMT

நாட்டில் முத்தலாக் எதிராகச் சட்டங்கள் கொண்டுவந்த போதிலும் இன்னும் முத்தலாக் வழங்கும் நடைமுறை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இது உத்தரப் பிரதேசம் மொராதாபாத் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது உறுதி செய்கின்றது.

ஒரு முஸ்லீம் பெண்மணி தனது மாமியாரால் வரதட்சணையில் எருமை வழங்காததால் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த பெண்மணியின் கணவன் அவளையும் அவள் குழந்தையையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி முத்தலாக் வழங்கியுள்ளான்.

கிடைத்துள்ள தகவலின் படி, பாதிக்கப்பட்ட பெண் ஷாமா ரஹ்மானாகரில் வசித்து வருகிறார். இவர் ரஹ்மாட்னாகர் காவல்துறை SSP யை அணுகி தனக்கு முத்தலாக் வழங்கிய கணவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் 2014 இல் முஷாஹிட் ஹுசைன் திருமணம் செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முஷாஹிட் சாம்பல் பகுதியில் வசித்து வருகிறார். தான் திருமணமான முதல் நாளிலிருந்தே துன்புறுத்தல்களை அனுபவித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் குறைந்த வரதட்சணை கொண்டுவந்தால் இந்த துன்புறுதல்களை அனுபவித்தார் என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் அடிக்கடி வரதட்சணைக்காக வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் வரதட்சணையாக ஒரு எருமையைக் கொண்டுவர அவர்கள் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் பாதிக்கப்பட்டவரின் தாயார் 30,000 சேகரித்து தனது மகளின் மாமியாருக்கு வழங்கியுள்ளார். சில நாட்கள் நிலைமை சரியாகச் சென்றாலும் மீண்டும் மாமியார் துன்புறுத்தலைத் தொடங்கியுள்ளார்.

ஜனவரி 9 இல் பாதிக்கப்பட்டவரின் நாத்தனாரும் அவரை தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அவரது கணவரும் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் அங்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் கணவர் முத்தலாக்கை உச்சரித்து முத்தலாக் வழங்கியுள்ளார். மேலும் இரண்டு குழந்தைகளில் ஒன்றை அவருடன் வைத்துக் கொண்டு மற்ற ஒரு குழந்தையை அவளுடன் அனுப்பி வீட்டை வெளியில் அனுப்பி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் தனது தாய் வீட்டிற்குச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பாதிக்கப்பட்டவர் SSP யை அணுகியுள்ளார் அவர் மகளிர் காவல் நிலையத்தில் இந்த புகாரை ஏற்றுக் கொள்ளக் கூறி அந்த கணவன் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News