Begin typing your search above and press return to search.
மனைவிக்கு தொற்று ஏற்பட்டதால் முத்தலாக் செய்த கணவன்: போலீசார் விசாரணை!

By : Rama Subbaiah
குஜராத் மனிதத்தை சேர்ந்தவர் ஷபனா சையத். இவரது கணவர் பஐஅர் சித்திக். இருவருக்கும் திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சித்திக் ஒழுங்கு முறையான வாழ்க்கையை மனைவியுடன் வாழவில்லை. மனைவியுடன் தவறான முறையில் பேசுவது, மற்றும் நடந்து கொள்வதுமாக இருந்தார். சிறிய தவறுக்காக கூட மனைவியை முதலாக் செய்துவிடுவதாக மிரட்டி வந்தார். இந்த நிலையில் ஷபனா கர்ப்பம் அடைந்தார். ஷபனா மருத்துவரிடம் சென்று காட்டியதில் சில மருத்துவ ஆலோசனைகள் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் திடீர் என ரத்த வாந்தி எடுத்தார். அதிக காய்ச்சலும் ஏற்பட்டது. அவரின் தாய் வீட்டினர் அவரை மருத்துவமனை அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பிறப்புறுப்பில் கடும் தொற்று இருப்பதாக கூறினர். இதையடுத்து ஷபனா சித்திக்கை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்படி கேட்ட நிலையில் கணவர் அதைக் கண்டுகொள்ளவில்லையாம். பின்னர் அவர் நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே மருத்துவர் தொற்றுநோயை உறுதிசெய்த பின்னர் வெளியேறிய அவரது கணவர், அவரைப் பார்க்க திரும்பி வரவில்லை.
இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்த பெண், தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து அவரது கணவர், அக்டோபர் 27’ஆம் தேதி, ஷபனாவின் பெற்றோரின் வீட்டிற்கு வந்து துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார். அவர் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை முடிக்க ரூ 1.50 லட்சம் கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார். இதற்குப் பிறகு, அவர் தனது குடும்பத்தின் முன்னால் மூன்று முறை தலாக் என்று கூறிவிட்டு வெளியேறினார் என்று ஷபனா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக முத்தலாக் கொடுத்த கணவர் மீது அக்டோபர் 31’ம் தேதி முஸ்லீம் பெண்கள் விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசில் அவர் புகார் அளித்தார். காவல்துறை தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

Next Story