பரபரப்பு! ஹைதராபாத் AIMIM தலைவர் பாரூக் அஹமத்தால் சுடப்பட்ட நபர் பலி!
பரபரப்பு! ஹைதராபாத் AIMIM தலைவர் பாரூக் அஹமத்தால் சுடப்பட்ட நபர் பலி!
By : Saffron Mom
கடந்த வாரம் தெலுங்கானா அடிலாபாத் பகுதியில் AIMIM தலைவர் பாரூக் அஹ்மத் மூன்று நபர்கள் மீது கண்மூடித் தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் சிகிச்சை பெற்றுவந்த மூன்று பேரில் ஒருவர் சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
ஹைதராபாத் நிசாம் மருத்துவ அறிவியல் கழகம்(NIMS) மருத்துவமனையில் அடிலாபாத் மாநகராட்சியின் கவுன்சிலர் சயீத் சமீர் துப்பாக்கிச் சூடு பெற்று பின்பு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அடிலாபாத் மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது இருதரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது AIMIM தலைவர் பாரூக் அஹமத் உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். மேலும் போட்டிநடத்தும் குழு மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் டிசம்பர் 18 இல் நடைபெற்றது. அந்த தாக்குதலில் அடைந்த மூன்று நபர்களில் சமீர் ஒருவராவார். மற்ற இருவர் சயீத் மன்னன் மற்றும் சயீத் மொடேஷம் ஆவர். இவர்கள் இருவரும் ராஜிவ் காந்தி மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறை AIMIM தலைவருக்கு எதிராக IPC சட்டம் 307 மற்றும் இந்திய ஆயுத சட்டம் 27/30 கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும் சனிக்கிழமை சமீர் உயிரிழந்ததால் அவர் மீது கொலைக் குற்ற வழக்காக மாற்றப்போவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
AIMIM Dist president shot and injured three people in Adilabad pic.twitter.com/elKROq0ddS
— sai priya (@priya_27_) December 18, 2020
முன்னர் காவல்துறை பாரூக்கின் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து அதற்கான உரிமையையும் ரத்து செய்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகின்றது. பாரூக் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.