Kathir News
Begin typing your search above and press return to search.

உலகத்திலேயே கொரோனா தடுப்பூசி கூடாரமாக ஐதராபாத் திகழும்.. 5 நிறுவனங்கள் தீவிர முயற்சி.!

உலகத்திலேயே கொரோனா தடுப்பூசி கூடாரமாக ஐதராபாத் திகழும்.. 5 நிறுவனங்கள் தீவிர முயற்சி.!

உலகத்திலேயே கொரோனா தடுப்பூசி கூடாரமாக ஐதராபாத் திகழும்.. 5 நிறுவனங்கள் தீவிர முயற்சி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2020 8:13 AM GMT

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடியாத பட்சத்தில் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டில் தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத், கொரோனா தடுப்பூசிக்கான உளகளாவிய உற்பத்தி கூடாரமாக உருவெடுக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உலகளவில் இதுவரை 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றுக்கு பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பைசர் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான மீட்பராக இந்தியா மாறப்போகிறது. அந்த அளவுக்கு 5 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஐதராபாத்தில் ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இதன் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.

இந்த நிறுவனத்துக்குத்தான் பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ம் தேதி நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தியின் முன்னேற்றம் பற்றி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், 60க்கு மேற்பட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் தனித்தனியாக பார்வையிட்டனர். இதன் பின்னர் இருந்து ஐதராபாத்தின் முக்கியத்துவம் உலகளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பயாலஜிக்கல் இ லிமிடெட் என்ற மற்றொரு ஐதராபாத் நிறுவனம், ஜான்சென் பார்மசூட்டிக்கல் என்வி என்ற நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன் பரிசோதனை நடந்து வருகிறது. அரவிந்தோ பார்மா என்ற ஐதராபாத் நிறுவனம், கொரோனா உட்பட பல்வேறு வைரஸ்களை குணப்படுத்தும் தடுப்பூசிகள் உற்பத்திக்காக ரூ.275 கோடி முதலீடு செய்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெடீஸ் லேப்ஸ் நிறுவனம், ரஷிய தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கும், இந்தியாவில் 10 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிப்பதற்கும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஹீட்டரோ என்ற ஐதராபாத் நிறுவனமும் ஸ்புட்னிக் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இது தவிர, ஐதராபாத் நிறுவனங்கள் கொரோனாவுக்கான மருந்துகளான ரெம்டெசிவிர், பேவிபிரவீர் ஆகியவற்றுக்கான மூலப்பொருட்களையும், செய்முறைகளையும் அளித்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இந்த 5 நிறுவனங்களும் உலகளவில் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யப்படுவதால், ஐதராபாத் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த சாதனைகள் அனைத்தும் பிரதமர் மோடியை சாரும் என்றே சொல்லலாம்.

அத்துடன், ஐதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News