விவசாயம் செய்யும் உரத்திலும் டூப்ளிக்கெட் அனுப்பி இலங்கையை ஏமாற்றிய சீனா! திணறிய நேரத்தில் இந்தியா செய்ய மாபெரும் கைமாறு!
IAF Delivers 100 Tonne Nano Nitrogen Fertiliser To Sri Lanka
By : Muruganandham
இலங்கையின் கோரிக்கையை அடுத்து, இந்தியா சுமார் 100,000 கிலோ நானோ நைட்ரஜன் உரங்களை இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் அறிக்கையின்படி, இரண்டு IAF விமானங்கள் இலங்கைக்கு உரம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன.
இரண்டு IAF C-17 Globemaster விமானங்களும் 100,000 கிலோ நானோ நைட்ரஜனுடன் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. இது இலங்கை அரசாங்கத்தின் இயற்கை விவசாயத்திற்கான முன்முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கும், இலங்கை விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரத்தை விரைவுபடுத்துவதற்கும் உதவும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, சீனாவில் இருந்து பெறப்பட்ட உரத்தில் அசுத்தம் இருப்பதாக கண்டறிந்ததை அடுத்து, இலங்கைக்கு உரம் வழங்குவதில் இந்தியா அண்மைக் காலத்தில் உதவி செய்வது இது இரண்டாவது முறையாகும்.
இலங்கைக்கு கடந்த அக்டோபர் மாதம் உரத்தை இந்தியா அனுப்பியிருந்தது. சீனாவின் Qingdao Seawin Biotech Group Co Ltd நிறுவனத்திடம் இருந்து 63 மில்லியன் டாலர் செலவில் 99,000 மெட்ரிக்டன் கரிம உரங்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை இலங்கை முன்னர் ரத்து செய்திருந்தது.
இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கரிம உர மாதிரிகள் இலங்கையில் பயன்பாட்டிற்கு ஏற்றது என்பதை ஆய்வுக்கூட பரிசோதனைகள் உறுதி செய்துள்ளதாக இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ET அறிக்கையின்படி, இலங்கையில் நானோ உரத்தின் தேவை அதிகமாக உள்ளது.