விமானப்படை அபிநந்தனுக்கு புதிய பதவி!
பாலகோட் தாக்குலில் பாக்கிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய நமது விமானப்படை உதவி கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு குரூப் கேட்பனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
By : Thangavelu
பாலகோட் தாக்குலில் பாக்கிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய நமது விமானப்படை உதவி கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு குரூப் கேட்பனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் உதவி கமாண்டராக இருந்த அபிநந்தன் வர்தமான் மிக் 21 ரக போர் விமானங்களை இயக்கி வந்தார். ணூடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கைபர் பக்துனக்வா பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி அழித்தனர்.
அந்த சமயத்தில் பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்காக பாகிஸ்தான் ராணுவம் விமானப்படை விமானம் மூலம் தாக்குதலை தொடர்ந்தது. இதில் பாலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ விமானத்தை அபிநந்தனின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அவர்கள் தரப்பிலான தாக்குதலில் அவரது விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது. அப்போது அபிநந்தன் அதிர்ஷ்டவமாக பாராசூட் மூலமாக தப்பித்து கீழே குதித்தார். அவரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்து சிறையில் வைத்திருந்தனர். இதன் பின்னர் இந்தியா மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாக அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் விடுவித்தது. அவருக்கு இந்திய மக்களின் ஆதரவு குவியத்தொடங்கியது. மேலும், சவுர்ய சக்ரா விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அபிநந்தனுக்கு விமானப்படையின் குரூப் கேப்டன் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் புதிய பொறுப்பை ஏற்பார் என விமானப்படை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar