நோய்த் தொற்றில் உயிர் இழப்பை தவிர்க்க தடுப்பூசி செலுத்துங்கள்: ICMR இயக்குனர் தகவல் !
நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறார் ICMR இயக்குனர்.
By : Bharathi Latha
இந்தியாவில் தொடர்சியான வண்ணம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் அளவு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நோய் தொற்று கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் பண்டிகைக் காலம் தொடங்குவதால், பண்டிகைகள், விழாக்களில் மக்கள் கூட்டமாகப் பங்கேற்க வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ICMR இயக்குநர் பல்ராம் பார்கவா அவர்கள் தற்பொழுது அளித்துள்ள பேட்டியின்படி, "அடுத்து வரும் காலம் பண்டிகைக் காலம். மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் தவிர்க்க வேண்டும். கொண்டாட்டத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களையும் தவிர்க்க வேண்டும். எனவே முடிந்தவரை கூட்டம் இருக்கும் இடங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும் தடுப்பூசி செலுத்திய பின்புகூட ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும். ஆனால், தடுப்பூசி செலுத்தியிருந்தால், நோயின் தீவிரத் தன்மை குறைந்திருக்கும்.
பல்வேறு தரப்பிலிருந்து கிடைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டாலும் அவர்கள் 96.6% நோய்த்தொற்று உயிரிழப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால், 97.5 சதவீதம் நோய்த்தொற்று உயிரிழப்பிலிருந்து காக்க முடியும். ஆதலால், ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்துங்கள்" என்று அவர் தெரிவித்தார்.
Input & image courtesy:ABPLive