டூ வீலரில் குழந்தை இருந்தால் வேகம் 40 கி.மீ தான்டக்கூடாது ! விரைவில் புதியவிதி அமல்படுத்தும் -மத்திய அரசு
இரண்டு சக்கர வாகனத்தில் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஏற்றிச்செல்லும்போது அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பயணிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அமல்படுத்த உள்ளது.
By : Thangavelu
இரண்டு சக்கர வாகனத்தில் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஏற்றிச்செல்லும்போது அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பயணிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அமல்படுத்த உள்ளது. நமது நாட்டில் குழந்தைகளை இரண்டு சக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் மிகவும் வேகமாக செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகனங்களில் 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளை அமரவைத்து பயணம் செய்தால் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில்தான் வாகனம் செல்ல வேண்டும். அதிலும் நவீன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹெல்மெட்டை குழந்தைகளுக்கு அணியவைக்க வேண்டும்.
மேலும், வாகனத்தை இயக்குபவருடன் பிணைப்பு பட்டைகள் வாயிலாக குழந்தைகளையும் இணைத்திருக்க வேண்டும். இதன் காரணமாக இரண்டு சக்கர வாகத்தின் இருந்து தவறி விழுவது முழுமையாக தடுக்கப்படும். இதில் எதாவது ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் கூறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: Telegraph India