இனி கூகுள் பே போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கு கட்டணமா? RBI நடவடிக்கை என்ன?
கூகுள் பே போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு மக்களிடையே கருத்து கேட்கவுள்ளது.
By : Bharathi Latha
கூகுள் பே போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்லைன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் இயல்பாக செய்யக்கூடிய அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக இது மாறி உள்ளது குறிப்பாக தற்போது சாதாரண கடைகளில் தொடங்கி பணம் பரிமாற்றம் என்பது சாதனமாக நகை வாங்குவது வரை அனைத்திலும் இத்தகைய ஆன்லைன் பரிமாற்றங்கள் காணப்படுகின்றன. டிஜிட்டல் பேமன்ட் வசதிகளான கூகுள் பே, பேடிஎம், PM UPI போன்ற பல்வேறு வழிகளில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே மக்களின் அன்றாட பயன்பாடுகளில ஒன்றாக தற்போது மக்களின் வாழ்வில் ஊடுருவியுள்ள கூகுள் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக RBI திட்டம் தீட்டி வருகிறது. பெரிய முதலீடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டங்களை அறிமுகப்படுத்துவதன் சாத்தியக்கூறுகளை ஆராய்கையில் இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மேம்பட்டு கொண்டிருக்கிறது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மின்னணு தொழில்நுட்பத்தில் முதலீட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இத்தகைய சேவைகளுக்கான கட்டணங்கள் வசூல் செய்வது சரியானதாக இருக்கும். இதுதொடர்பாக மக்கள் தங்களுடைய முடிவுகளை RBI தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பணமதிப்பு இழப்பிற்கு பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, பொதுமக்களின் தினசரி வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இப்படி இருக்க மக்கள் எளிமையாக பயன்படுத்தும் இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக மக்கள் தங்களுடைய கருத்துகளை RBI இடம் தெரிவிக்கலாம்.
Input & Image courtesy: News 18