Kathir News
Begin typing your search above and press return to search.

IIT முன்னாள் மாணவர்கள் அமைப்பின் புதிய முயற்சி: ஆயுர்வேத அடிப்படையில் கொரோனா தடுப்பூசி!

IIT முன்னாள் மாணவர்கள் அமைப்பின் புதிய முயற்சி: ஆயுர்வேத அடிப்படையில் கொரோனா தடுப்பூசி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 May 2021 7:35 PM IST

தற்பொழுது நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆயுர்வேதத்தை அடிப்படையாகக்கொண்டு தடுப்பூசி சோதனையை IIT முன்னாள் மாணவர்கள் அமைப்பு கடந்த ஆண்டிலிருந்து மேற்கொண்டு வருகிறது. IIT முன்னாள் மாணவர் பேரவை நிறுவிய மெகலாப் சுமார் ரூ. 300 கோடி நிதியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு டோஸ் கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.


இதன் மூலம் கொடிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், முதல் டோஸின் சில நாட்களுக்குள் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் முடியும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை யோசனைகள் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் கவுன்சிலால் அனுமதி வழங்கப்பட்ட மெகலாப், ஆயுர்வேத தடுப்பூசியை சோதனையை முதலில் தொடங்கியது ஆனால் நோய் தொற்று பரவலின் காரணமாக தடுப்பூசி பொருளை உற்பத்தி செய்வதற்கு பதிலாக தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து வாங்கி முதலில் மும்பையிலும், பின்னர் பிற இடங்களிலும் விநியோகிக்கவுள்ளது என முன்னாள் IIT மாணவர் பேரவைத் தலைவர் ரவி சர்மா கூறினார்.


இன்னும் ஆறு மாதங்களில் விற்பனைக்கு கிடைக்கும் தடுப்பூசி, ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட துணை தடுப்பூசி ஆகும். இது ஊசி மற்றும் சொட்டு மருந்து என இரு விதத்திலும் கிடைக்கும்.

மேலும் செயல்திறனை மேம்படுத்துவதோடு, பக்க விளைவுகளை குறைக்கும் மற்றும் எல்லாவகையான மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸிடமும் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. IIT முன்னாள் மாணவர் கவுன்சிலால் முன்மொழியப்பட்ட ஆயுர்வேத தடுப்பூசி முதல் ஆன்டிஜென் இல்லாத தடுப்பூசியாகும். இது சுய கட்டுப்படுத்தக் கூடியது மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும். வைரஸ் இடம் போராடி தொடர்ச்சியாக மேம்படுத்தக்கூடிய தடுப்பூசியை வழங்குவதே இறுதி நோக்கம். இதனால் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News