'நான் கார்ப்பரேட்டுக்கு எதிரானவன் அல்ல' - ராகுல் அடித்த திடீர் பல்டிக்கு காரணம் என்ன?
'நான் கார்ப்பரேட்டுக்கு எதிரானவன் அல்ல' என ராகுல் காந்தி பல்டி அடிக்கும் விதமாக பேசியுள்ளார் ராகுல் காந்தி.

By : Mohan Raj
'நான் கார்ப்பரேட்டுக்கு எதிரானவன் அல்ல' என ராகுல் காந்தி பல்டி அடிக்கும் விதமாக பேசியுள்ளார் ராகுல் காந்தி.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த தொழிலதிபர் கௌதம் அதானி சில நாட்களுக்கு முன்பாக மாபெரும் தொழில் முதலீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற கௌதம் அதானி ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்து வரும் ஆண்டுகளில் 65,000 கோடிக்கு அதானி குழுமம் முதலீடு செய்வதாக அறிவித்தார்.
பத்தாயிரம் மெகாவாட் சோலார் மின் உற்பத்தி மையம், சிமெண்ட் ஆலை, ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம், மேம்பாடு பணிகள் என்ற திட்டத்தில் பல்வேறு திட்டங்களை செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இந்த திட்டத்தை முதலமைச்சர் தலைமை ஏற்கும் விழாவில் விழாவில் அறிவித்துள்ளது பெரும் விவாத பொருளாகியுள்ளது. இந்நிலையியல் அதானி முதலீடு குறித்து ராகுல் காந்தி தனது விளக்கத்தை அளித்துள்ளார். கர்நாடகாவில் அவர் பேசியதாவது ராஜஸ்தானுக்காக 60,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை வழங்க அதானி வழங்க உள்ளார் இது போன்ற வாய்ப்பு எந்த முதலமைச்சருக்கு கிடைத்தாலும் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள்.
'எனது விமர்சனமே அரசியல் அதிகாரத்தை வைத்து நாட்டின் அதிகாரத்தை நிர்ணயம் செய்வதற்கு எதிராகத்தான் நான் கார்ப்பரேட்டுக்கு எதிரானவன் அல்ல' என ராகுல் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக பல்டி அடிக்கும் விதமாக பேசியுள்ளார்.
