Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டினியுடன் இருக்கமாட்டார்கள் - பிரம்மிக்க வைக்கும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா..!

National Food Security Mission Complements Successful Implementation of Pradhan Mantri Garib Kalyan Anna Yojana

ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டினியுடன் இருக்கமாட்டார்கள் - பிரம்மிக்க வைக்கும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா..!

Indianexpress

MuruganandhamBy : Muruganandham

  |  17 Aug 2021 7:40 AM GMT

கொரோனா பெருந்தொற்று, ஊரடங்குக்கு வழிவகுத்து, சமூகத்தில் பல பிரிவினருக்கு பலவித சிக்கல்களை ஏற்படுத்தியது. பெருந்தொற்று நேரத்தில், கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, மத்திய அரசின் முக்கிய அக்கறையாக மாறியது. தற்சார்பு இந்தியாவுக்கு பிரதமர் விடுத்த அழைப்பு, விவசாயிகளால் நிறைவேற்றப்பட்டது.

அவர்களின் அதிகளவிலான அறுவடை, உணவு தானியங்களை போதிய அளவுக்கு இருப்பு வைக்க வழிவகுத்தது. இது உண்மையிலேயே பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனாவை வெற்றிகரமாக அமல்படுத்த உதவியது. ரேசன் அட்டை தாரர்களுக்கு இலவசமாக அரிசி அல்லது கோதுமை போன்ற உணவு தானியங்கள் அளிப்பதை உறுதி செய்தது.

இதனால் ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டினியுடன் இருக்கமாட்டார்கள். தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், அரிசி, கோதுமை மற்றும் பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

2021-22ம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய வேளாண் அமைச்சகம் ரூ. 527 கோடியை அனுமதித்தது.

இவற்றில் ரூ.7.51 கோடி, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் அரிசிக்கும், ரூ.27.65 கோடி பருப்புக்கும், ரூ.2.49 கோடி கம்பு, சோளம் போன்ற உணவு தானியங்களுக்கும், ரூ.12 கோடி ஊட்டச்சத்து தானியங்களுக்கும், ரூ.3 கோடி பருப்புகளுக்கும் ஒதுக்கப்படுகிறது. இந்தாண்டு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஊட்டசத்து தானியங்கள் மற்றும் பருப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய, உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதை, தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

இத்திட்டம், பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனாவை வெற்றிகரமாக அமல்படுத்த அரசுக்கு உதவியது. இதன் மூலம் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் ஏழை பயனாளிகளுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக கோதுமை, அரிசி, பருப்புகள் வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் தங்கள் நிலத்தை பல்வேறு பயிர்கள் விளைவிப்பதற்கு பயன்படுத்த தேவையான ஆலோசனைகளை வேளாண் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News