Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயத்திற்கு முக்கியத்துவம்.. 100வது கிசான் ரயிலை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி.!

விவசாயத்திற்கு முக்கியத்துவம்.. 100வது கிசான் ரயிலை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி.!

விவசாயத்திற்கு முக்கியத்துவம்.. 100வது கிசான் ரயிலை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2020 12:14 PM GMT

விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்கான பணிகளை தற்போது இருந்து மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் விளைபொருட்களை உடனடியாக சந்தைக்கு எடுத்துசெல்லும் வகையில் கிசான் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

முதல் கிசான் ரயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாலியில் இருந்து பீகார் மாநிலம் தானாபூர் வரை இயக்கப்பட்டது. இதன் பின்னர் முசாபர்பூர் வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் கிசான் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 100-வது கிசான் ரயில் சேவை இன்று தொடங்குகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள ஷாலிமார் வரை இயக்கப்படும் இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உயர் அதிகாரிகள், விவசாயிகள் பலர் பங்கேற்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News