Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் எதிர்பார்த்த அளவை விட கூடுதல் நிலக்கரி! அனல்மின் நிலையங்கள் நிம்மதி - அசத்தும் மோடி அரசின் நிர்வாகம்!

இந்தியாவில் எதிர்பார்த்த அளவை விட கூடுதல் நிலக்கரி! அனல்மின் நிலையங்கள் நிம்மதி - அசத்தும் மோடி அரசின் நிர்வாகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Nov 2022 3:25 AM GMT

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி அக்டோபரில் 448 மில்லியன் டன் அளவை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தின் உற்பத்தியைவிட 18% அதிகமாகும். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியும் 17% அதிகரித்துள்ளது.

நவம்பர் 2022 இறுதிக்குள் மத்திய நிலக்கரி அமைச்சகம் 30 மில்லியன் டன் அளவு நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளது. மார்ச் 31, 2023-க்குள் அனல் மின் நிலையங்களில் 45 மில்லியன் டன் நிலக்கரியை கையிருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளது. இது மேலும் சுரங்கத்தின் அருகில் நிலக்கரி கையிருப்பை வைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நிலக்கரியை ஏற்றிச் செல்வதில் 9% வளர்ச்சி இருந்தது. இது மின் உற்பத்தி நிலையங்களில் கையிருப்பை அதிகரிக்க உதவியது. ரயில் மற்றும் சாலை வழியாக நிலக்கரியை கொண்டு செல்ல மின்சார அமைச்சகமும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

கடல் வழியாக நிலக்கரி கொண்டுசெல்லப்படுவதை ஊக்கப்படுத்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதை அமைச்சகம், மின்சார அமைச்சகம், ரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. நிலக்கரி உற்பத்தி, கொண்டு செல்லுதல், உள்நாட்டு நிலக்கரியின் தரம் ஆகியவற்றை நிலக்கரி அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

Input From: Business Standard

Next Story
கதிர் தொகுப்பு
Trending News