கணவனால், மனைவிகளுக்கு வன்கொடுமை அதிகரிப்பு.. எந்த மாநிலத்தில் தெரியுமா.?
கணவனால், மனைவிகளுக்கு வன்கொடுமை அதிகரிப்பு.. எந்த மாநிலத்தில் தெரியுமா.?
By : Kathir Webdesk
நாட்டில் மனைவிகள் மீது கணவன்கள் வன்கொடுமை நிகழ்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற வன்கொடுமைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவது மட்டும் தடுக்க முடிவதில்லை.
கர்நாடகா மாநிலத்தில் 2019 -20ம் ஆண்டில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் சதவிகித அடிப்படையில் மனைவிகளை கணவன்கள் தாக்கியது தொடர்பான வழக்கு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதாவது இது போன்ற சம்பவங்கள் 115 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 2018-19ம் ஆண்டை விட அதிகம் என்று தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல வாரியம் வெளியிட்டுள்ள 5வது சுற்று ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கணவன்களால் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லைக்கு 18 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற சம்பவம் கர்நாடகத்தில் 100 சதவிகிதத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் பல்வேறு வகைகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.