Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சியான தகவல்: ஐந்து மடங்கு உயர்ந்த கட்டணம்?

திருப்பதி செல்லும் பக்தர்களின் தற்போதைய கட்டணத்தை ஐந்து மடங்காக உயர்த்தியிருக்கிறார்கள்.

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சியான தகவல்: ஐந்து மடங்கு உயர்ந்த கட்டணம்?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Jan 2023 1:07 AM

திருப்பதியில் பக்தர்களின் தங்கும் அருகில் வாடகை கட்டணத்தில் இரண்டு முதல் ஐந்து மடங்கு வரை உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக பக்தர்கள் வரக்கூடிய கோவில்களில் ஒன்றாக திருப்பதியில் ஏழுமலையான் கோவில் இருக்கிறது. இங்கு தினமும் சுமார் கோடி கணக்கில் உண்டியல் வருமானம் வருகிறது என்று தகவல்களும் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை கொடுத்து உள்ளது. குறிப்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை கணக்கில் கொண்டு ஏராளமான வசதிகள் உட்பட அன்னதானம் போன்ற பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.


இந்நிலையில் திடீரென பக்தர்கள் தங்கும் அருகில் வாடகை திருப்பதி திருமலை தேவஸ்தானம் இரண்டு முதல் ஐந்து மடங்கு வரை உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக நத்தகம், பஞ்சாட்சனம், வகுள மாதா, கௌஸ்தவம் ஆகிய தங்கும் அறைகள் உள்ளிட்ட வளாகத்தின் ஒரு அறைக்கான வாடகை 500 முதல் 600 வரை கட்டணமாக பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது இதை ஆயிரமாக உயர்த்தியது. தேவஸ்தானம் அதேபோல் நாராயணகிரி தங்கும் விடுதியில் அரை வாடகை 150 என இருந்த நிலையில் தற்போது 600 ஆகும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நாராயணகிரி வாடகை 750 என்று நிலையில் இருந்தது தற்போது 1700 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.


மேலும் விடுதியின் சிறப்பு அறை ஒன்றுக்கு வாடகை 750 ஆக இருந்த நிலையில் தற்போது ஜி.எஸ்.டி உள்ள தகவல்களை சேர்த்து 2200 என்று உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் திருப்பதிக்கு வரும் வருமானத்தை கணத்தில் கொண்டு பக்தர்களுக்கு இலவசமாக தங்குமறைகளை கொடுக்கலாம் அல்லது குறைந்த வாடகைக்கு அருகதை கொடுக்கலாம் என பல்வேறு தரப்பிலிருந்து பக்தர்கள் கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News