பிளாஸ்டிக் மூவர்ணக்கொடி அனுமதி ரத்து: மத்திய அரசு அதிரடி !
75வது சுதந்திர தினத்தின் போது பிளாஸ்டிக் மூவர்ண கொடியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
By : Bharathi Latha
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசின் ஒரு முடிவு எடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் பெரும்பாலும் கொண்டாடப்படும் விழாக்களில் மக்கள் பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை விளைவிக்கும். மேலும் அவற்றை அப்புறப்படுத்தப்படுவதிலும் மிகப்பெரிய பிரச்சனை அடங்கியுள்ளது. எனவே அவற்றை தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செய்யப்படும் பொருட்கள் பயன்பாடு தற்பொழுது குறைந்து கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட மூவர்ண தேசிய கொடியை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்ககூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட இருக்கிறது. இதையொட்டி மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
எனவே இந்த கடுமையான சூழ்நிலையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், பிளாஸ்டிக் கொடிகளுக்கு காகிதம் போல மக்கும் தன்மையில்லை என்பதோடு, பயன்பாட்டுக்கு பிறகு உரிய மரியாதையுடன் பிளாஸ்டிக் கொடிகள் அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதிலும் நடைமுறை சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் மூவர்ணக் கொடிகள் தவிர்க்க மக்கள் ஒத்துழைப்பு செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Image courtesy: Zee news