இவர்கள் சாதனையினால் நாடு பெருமை கொள்கிறது: குடியரசுத் தலைவர் பெருமிதம்!
"டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளின் சாதனையினால் நாடு பெருமை கொள்கிறது" குடியரசுத் தலைவரின் பெருமிதமாக உரை.
By : Bharathi Latha
இந்த வருடம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பான முறையில் விளையாடி நம் நாட்டிற்கு பெருமைகளை சேர்த்துள்ளார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், அவரது இல்லமான ராஷ்டிரபதி பவனில் தேநீர் விருந்து வழங்கியுள்ளார். இந்த விருந்தில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தடகள வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்.
இதில் பேசிய குடியரசுத் தலைவர், "நாட்டிற்கு புகழ் சேர்த்த ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளை நினைத்து முழு நாடும் பெருமைகொள்கிறது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய தடகள வீரர்களுக்கு வாழ்த்துகள். இவர்கள் ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகப்படியான பதக்கங்களை நாட்டிற்காக குவித்துள்ளனர். நாடு இவர்களை நினைத்து பெருமை கொள்கிறது. சவால்களில் அபார திறமையை வெளிப்படுத்திய நமது வீராங்கனைகளை நினைத்து பெருமை கொள்கிறோம்.
இத்தகைய தொற்று நோய் காலத்தில் முடங்கியுள்ள எங்களுக்கு கொண்டாட்டத்திற்கான வாய்ப்பினை கொடுத்துள்ளீர்கள். சில நேரங்களில் நீங்கள் வெற்றிபெறலாம். சில நேரங்களில் தோற்கலாம். ஆனால், நீங்கள் விளையாட்டில் பங்கேற்கும்போது புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறீர்கள்" என்று கூறியுள்ளார். மேன்மேலும் அதிக சாதனைகள் புரிய உங்களுக்கு எனது வாழ்த்துகள். நீண்ட காலத்திற்கு பின்னர் நமது தேசியக்கொடி உயர்ந்துள்ளது. தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. அந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரின் உணர்வுடன் இணைந்திருந்தது. இந்த சாதனையானது நாட்டின் இளைஞர்கள் விளையாட்டின் பக்கம் திரும்ப உந்து சக்தியாக அமையும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Image courtesy:India Today