இந்தியாவில் புதிதாக இத்தனை நபர்களுக்கா கொரோனா பரவியிருக்கு ?
இதன் மூலம் மொத்த தொற்று எண்ணிக்கை 3,16,55,824 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று கொரோனா தொற்றால் ஒரே நாளில் 541 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,24,351 ஆக அதிகரித்துள்ளது.
By : Thangavelu
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக தினசரி பாதிப்பு மீண்டும் ஏற்ற இறக்கங்ளுடன் பதிவாகிறது. அந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,831 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த தொற்று எண்ணிக்கை 3,16,55,824 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று கொரோனா தொற்றால் ஒரே நாளில் 541 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,24,351 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 39,258 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 3,08,20,521 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3வது அலை வரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் அனைத்து வகையான முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: Twiter
https://www.puthiyathalaimurai.com/newsview/111463/COVID19-India-reports-41831-new-cases-541-deaths-and-39258-recoveries-in-the-last-24-hours