Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் 50 சதவீத மக்கள் முககவசம் அணிவதில்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

நாட்டில் 50 சதவீத மக்கள் இப்போதும் முககவசம் அணிவதில்லை எனவும், 64 சதவீதம் பேர் வாயையும், மூக்கையும் மறைக்கின்ற விதமாக முககவசம் அணிவதில்லை என்றும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 50 சதவீத மக்கள் முககவசம் அணிவதில்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 May 2021 4:58 PM IST

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த பிப்ரவரி முதல் ஏறுமுகமாகவே உள்ளது. ஒரு சில மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனிடையே கடந்த ஏப்ரல் 29ம் தேதி நிலவரப்படி, பாதிப்பு விகிதமானது குறைவாக இருப்பதாக 210 மாவட்டங்கள் தெரிவித்தன. ஆனால் மே மாதம் 13 மற்றும் 19ம் தேதிகளில் இந்த எண்ணிக்கையானது 303 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது.





இதில் 7 மாநிலங்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு விகிதம் உள்ளது. 22 மாநிலங்களில் 15 சதவீதத்துக்குள் பாதிப்பு விகிதம் உள்ளது.




இந்நிலையில், நாட்டில் 50 சதவீத மக்கள் இப்போதும் முககவசம் அணிவதில்லை எனவும், 64 சதவீதம் பேர் வாயையும், மூக்கையும் மறைக்கின்ற விதமாக முககவசம் அணிவதில்லை என்றும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News