Kathir News
Begin typing your search above and press return to search.

எலட்ரானிக் சிப் தயாரிப்பில் சீனாவுடன் சொடுக்கு போடும் இந்தியா - கடந்த 5 ஆண்டுகளில் கண்ட அபார முன்னேற்றம்!

India a significant design and manufacturing hub for electronics as part of its Atmanirbhar Bharat economic policies

எலட்ரானிக் சிப் தயாரிப்பில் சீனாவுடன் சொடுக்கு போடும் இந்தியா - கடந்த 5 ஆண்டுகளில் கண்ட அபார முன்னேற்றம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2022 11:01 AM GMT

ஆத்மநிர்பார் பாரத் பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, மின்னணு சாதனங்களுக்கான குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்குவதே இந்திய அரசின் குறிக்கோளாகும்.

மின்னணுவியல் தேசியக் கொள்கை 2019 (NPE 2019) மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறைக்கு உலகளவில் போட்டியிடுவதற்கான சூழலை உருவாக்குவதற்கும், நாட்டில் உள்ள திறன்களை ஊக்குவித்து இயக்குவதன் மூலம், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவற்கும் உதவும்.

2016-17-ல் ரூ 3,17,331 கோடியாக இருந்த மின்னனு சாதனங்களின் உற்பத்தி மதிப்பு, 2017-18-ல் ரூ 3,88,306 கோடியாகவும், 2018-19-ல் ரூ 4,58,006 கோடியாகவும், 2019-20-ல் ரூ 5,33,550 கோடியாகவும், 2020-21-ல் ரூ 5,54,461 கோடியாகவும் இருந்தது.

2016-17-ல் ரூ 39.980 கோடியாக இருந்த மின்னனு சாதனங்களின் ஏற்றுமதி மதிப்பு, 2017-18-ல் ரூ 41,220 கோடியாகவும், 2018-19-ல் ரூ 61,908 கோடியாகவும், 2019-20-ல் ரூ 82,936 கோடியாகவும், 2020-21-ல் ரூ 81,948 கோடியாகவும் இருந்தது.

மின்னணு சாதனங்களுக்கான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் நோக்கில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News