Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.என்.எஸ் விக்ராந்த் மூலம் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா

ஐ.என்.எஸ் விமானம் தாங்கி போர்க்கப்பலை உருவாகி வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா தன்னையும் சேர்த்துக் கொண்டுள்ளது.

ஐ.என்.எஸ் விக்ராந்த் மூலம் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா

KarthigaBy : Karthiga

  |  3 Sep 2022 4:15 PM GMT

இந்தியா முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது. இந்த ஆற்றலைப் பிற நாடுகள் என்று பார்த்தால் அவை அமெரிக்கா, இங்கிலாந்து,ரஷ்யா சீனா ,பிரான்ஸ் ஆகும்.இந்த 5 நாடுகளும் வல்லரசு நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நநிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும்.

இந்தியாவும் உள்நாட்டில் விமானம் தாங்கி போர்க்கப்பலை வடிவமைத்துக் கட்டியதன் மூலம் நிரந்தரமாக வளர்ந்த நாடுகளின் பட்டியலில் தன்னை சேர்த்துக்கொண்டுள்ளது.அதிநவீன தளவாடங்களின் சங்கமமாக ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் அமைந்துள்ளது.


இந்திய கடற்படைக்கு இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒரு வரம் என்றால் அது மிகையில்லை .18 மாடி உயரம் கொண்ட அதிநவீன தளங்களுடன் கூடிய விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலில் 1600 வீரர்கள் பயணம் செய்யலாம் என்பது சிறப்பம்.

2,200 பெட்டிகளை கொண்ட இந்த கப்பல் ஒரு முழுமையான ஆஸ்பத்திரியையும், இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகளையும் ,சி.டி ஸ்கேன் எந்திரத்தையும் கொண்டிருப்பதால் எந்த அவசரகால சூழலையும் இந்த கப்பல் எதிர்கொள்ளும் திறனை கொண்டுள்ளது.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News