Kathir News
Begin typing your search above and press return to search.

1000 மெகாவாட் திறனுள்ள மின்கலன் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் !

India begins its journey in the large scale Battery Energy Storage System (BESS) for 1000 MWhourproject

1000 மெகாவாட்  திறனுள்ள மின்கலன் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான   திட்டத்துக்கு  மத்திய அரசு ஒப்புதல் !
X

MuruganandhamBy : Muruganandham

  |  16 Oct 2021 3:55 AM GMT

பெட்ரோலியப் பொருட்கள் அல்லாத எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை 175 கிகாவாட்டிற்கும் மேல் அதிகரிப்பதோடு, பிறகு 450 கிகாவாட் வரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறையை பசுமையாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

2022-க்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, 2030-க்குள் 450 ஜிகாவாட் எரிசக்தி திறனை எட்டும் வகையில் உயர்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். தொழில் உலகத்தின் பல்வேறு நாடுகளை விட இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்றம் குறைவாக உள்ள போதிலும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் தனது முயற்சிகளை இந்தியா தொடர்கிறது.

தற்போது சோதனை முயற்சியாக 1000 மெகாவாட் திறனுள்ள மின்கலன் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் மின்துறை அமைச்சகத்தின் கூட்டு முயற்சியாகும்.

2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மிகப் பெரிய மின்கலன் அமைப்புகள் தேவை.

1000 மொகாவாட் திறனுள்ள மின்கலன்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை கோர புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின், இந்திய சூரிய மின்சக்தி கார்பரேஷன் முடிவு செய்துள்ளது.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News