பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம்: கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் விஷயங்கள் என்னென்ன?
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடக்கிறது.
By : Bharathi Latha
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று இரண்டு சபைகளில் கூட்டமான கூட்டத்துடன் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்க இருக்கிறது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரை நிகழ்த்த இருக்கிறார். மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2023 மற்றும் 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பெரும் பகுதிகளாக நடைபெற இருக்கிறது.
மு தல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும். அடுத்த அமர்வு பிப்ரவரி பதிமூன்றாம் தேதி தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பட்ஜெட் கூட தொடரின் முதல் இரண்டு நாட்களுக்கான பூஜ்ஜிய நேரம் கேள்வி நேரம் எதுவும் இருக்காது. பிப்ரவரி இரண்டாம் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும்.
இந்த முடிவில் இரண்டு சபைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதில் அளிப்பார். இந்த கூட்டத்தொடரின் போது சீன எல்லையில் நிலவும் பதற்றம்,தொழிலதிபர் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி தயாராகி வருகிறது.
Input & Image courtesy: Maalaimalar