இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டியது.!
இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 067 ஆக அதிகரித்துள்ளது.

By : Thangavelu
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்தை கடந்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 03 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுதான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று 478 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 067 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்து 136 ஆக உள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியே 91 லட்சத்து 05 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழக மற்றும் பிற மாநில தேர்தல்கள் முடிந்த உடன் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
