இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு கொரோனா.. 291 பேர் உயிரிழப்பு.!
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,08,910 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆகவும் உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,61,240 ஆக உயர்ந்துள்ளது.

By : Thangavelu
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நிலையை போன்று மீண்டும் தொற்று பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது பற்றி சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62, 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 30,386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் 291 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,08,910 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆகவும் உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,61,240 ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி ஒரு புறம் போட்டு வந்தாலும், மக்கள் கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றாததால் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வந்தால் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும்.
