Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்த கொரோனா தொற்று.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்த கொரோனா தொற்று.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 May 2021 11:51 AM IST

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. மத்திய அரசு எடுத்த முயற்சியால் தொற்றின் தீவிரம் சற்று குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.





இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,22,96,414 ஆக உயர்ந்துள்ளது.




அதே போன்று தொற்றுக்கு ஆளாகி நேற்று மட்டும் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,42,362 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 3,86,444 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்தியாவில் இதுவரை 16 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 663 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News