இந்தியா: இன்றைய கொரோனா நிலவரம் என்ன.!
புதிதாக 30,093 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,74,322 ஆக உயர்ந்துள்ளது. 374 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இந்தியாவில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.11 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 30,093 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,74,322 ஆக உயர்ந்துள்ளது. 374 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து 45,254 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,53,710 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 4,06,130 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போன்று கொரோனா தடுப்பூசி 41,18,46,401 பேருக்கு போடப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியாவில்தான் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
